தேசிய செய்திகள்

போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ + "||" + CBI withdraws plea seeking further probe into Bofors case

போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ

போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ
போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ திரும்ப பெற்றது.
கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கடந்த 2005-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக 2018 பிப்ரவரியில் சிபிஐ கோர்ட்டை நாடியது. 2018 டிசம்பர் 4-ம் தேதி, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள எங்களுடைய அனுமதி ஏன்? என கேள்வியை எழுப்பியது நீதிமன்றம். இந்நிலையில் சிபிஐ மனுவை திரும்ப பெற்றது. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதனை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் - சிபிஐ
போபர்ஸ் வழக்கில் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வோம் என சிபிஐ தெரிவித்துள்ளது.
2. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றது
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ போலீஸ் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு ஏற்றது.
3. மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.