பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த கிராமத்தினர்


பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த கிராமத்தினர்
x
தினத்தந்தி 16 May 2019 4:02 PM IST (Updated: 16 May 2019 4:02 PM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் திருமணமான பெண்ணுடன் தப்பியோடிய கள்ளக்காதலனையும், அவர்களுக்கு உதவியதாக இரு பெண்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர், தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து கள்ளக் காதலனை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைப்பது போல் அழைத்துள்ளார்.

இதை நம்பிய அந்த இளைஞர், தனது உறவுக்கார பெண்கள் இருவருடன் வந்த போது, அவர்கள் மூவரையும் தப்பியோடிய பெண்ணின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் அடித்துள்ளனர். மேலும் இரு பெண்களுக்கும் பாலியல் தொல்லைகளும் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். தாக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 18 வயதுக்கு குறைந்தவர் என்பதால், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Next Story