நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம்
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story