தேசிய செய்திகள்

‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ பிரக்யாசிங் தாக்குர் கருத்திலிருந்து விலகியது பா.ஜனதா + "||" + Pragya Singh Thakur calls Nathuram Godse a patriot BJP disagrees

‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ பிரக்யாசிங் தாக்குர் கருத்திலிருந்து விலகியது பா.ஜனதா

‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ பிரக்யாசிங் தாக்குர் கருத்திலிருந்து விலகியது பா.ஜனதா
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பா.ஜனதா பெண் வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்கையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன். நான் காந்திஜியின் கொள்ளுப்பேரனாக இங்கு வந்துள்ளேன் என்று கூறியது சர்ச்சையாகியது. பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தன. நான் பேசியது சரித்திர உண்மை என கமல்ஹாசன் கூறியுள்ளார். இதற்கிடையே அவர் மீது வழக்குகள் குவிகின்றன. 

இந்த நிலையில் பெண் சாமியாரும், பா.ஜனதா வேட்பாளருமான மலேகான் குண்டுவெடிப்பில் கைதான பிரக்யா சிங் தாக்குர், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் பேசிய பிரக்யாசிங்கிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில் , நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார் எனக் கூறினார். மேலும்,  நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் எனவும் கூறினார். 

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யாசிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளன. இந்நிலையில் இச்சர்ச்சையில் இருந்து பா.ஜனதா கட்சி விலகிக்கொண்டது.  பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ மகாத்மா காந்தி தொடர்பாக பிரக்யாசிங் தாக்குர் கூறிய கருத்தை முற்றிலும் ஏற்க முடியாது. இந்த கருத்துக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும். தனது ஆட்சேபகரமான கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்
பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
2. காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்
காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
3. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.
4. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி; பா.ஜனதாவும் ஆதிக்கம்
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பா.ஜனதாவும் ஆதிக்கம் செலுத்துகிறது.
5. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் படுதோல்வியை நோக்கி செல்கிறார்.