தேசிய செய்திகள்

"பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து + "||" + Ghulam Nabi Azad, Congress: No, this is not true that Congress will not claim or Congress is not interested in Prime Minister post.

"பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து

"பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து
இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது. பாரம்பரியமிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என கூறினார்.

முன்னதாக சிம்லாவில் பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத் நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என் அகூறி இருந்தார்.பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது என கூறி  இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. 12,915 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு- தேர்தல் ஆணையம்
12,915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.
2. அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின்
அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
3. 8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர்- பிரதமர் மோடி
வெறும் 8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், 35 இடங்களை வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
4. வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள், இல்லையெனில் சிறையில் தள்ளுவேன்- மம்தா பானர்ஜி ஆவேசம்
திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறைக்கு செல்வீர் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. வரும் 23ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்காக சோனியா காந்தி கடிதம்
வரும் 23ம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.