தேசிய செய்திகள்

பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் - பிரியங்கா காந்தி தாக்கு + "||" + Better to elect Amitabh Bachchan as PM than Modi says Priyanka Gandhi

பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் - பிரியங்கா காந்தி தாக்கு

பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் - பிரியங்கா  காந்தி தாக்கு
பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் என இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.
லக்னோ, 

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி பேசுகையில்,  மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய நடிகரை (மோடியை) நீங்கள் பிரதமராக தேர்வு செய்திருக்கிறீர்கள். 

அவருக்கு பதிலாக நீங்கள் அமிதாப்பச்சனைக்கூட தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். யாரும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை என்பது வேறு வி‌ஷயம் என்றார். 

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த கையோடு அமிதாப்பச்சனையும் பிரியங்கா காந்தி விமர்சனத்திற்கு இழுத்ததற்கு காரணம் உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பிரியங்காவின் தந்தை ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த ராஜீவ் காந்தி 1983 தேர்தலில் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர். 

கடந்த 1986-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. போபர்ஸ் ஊழலில் அமிதாப் பெயர் அடிபட்டபோது அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த ஊழலில் அவர் குற்றம் செய்யவில்லை என நிரூபணமானது. ஆனாலும் அமிதாப்பச்சன் அரசியலைப் பற்றி திரும்ப நினைத்துப்பார்க்கவில்லை. அதனை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி
அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
2. காஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி
மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரிகளை பின்பற்றி காஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.
3. பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
4. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
5. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.