உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
x
தினத்தந்தி 18 May 2019 10:23 AM IST (Updated: 18 May 2019 10:39 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

கேதார்நாத்,

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில்  பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் இந்த பயணத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Next Story