“நாட்டு மக்களுக்காகவே கேதார்நாத்தில் பிரார்த்தனை” பிரதமர் நரேந்திர மோடி பேட்டி


“நாட்டு மக்களுக்காகவே கேதார்நாத்தில் பிரார்த்தனை” பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
x
தினத்தந்தி 19 May 2019 8:48 AM IST (Updated: 19 May 2019 8:48 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு மக்களுக்காகவே கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கேதார்நாத்,

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள புனித குகையில் பிரதமர் நரேந்திர  மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் காலையில் பத்ரினாத்திற்க்கு புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது.
நாட்டு மக்களுக்காகவே கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன்.

காணொலிக்காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன்.
கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல.

மன அமைதி பெற கேதார்நாத்திற்கு பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story