7-ம் கட்ட மக்களவை இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் - 9 மணி நிலவரம்...


7-ம் கட்ட மக்களவை இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் - 9 மணி நிலவரம்...
x
தினத்தந்தி 19 May 2019 10:04 AM IST (Updated: 19 May 2019 10:04 AM IST)
t-max-icont-min-icon

7-ம் கட்ட மக்களவை இறுதிக் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து காலை 9 மணி நிலவரப்படி பற்றி தெரியவந்துள்ளது.

சென்னை,

59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில்  நாகமலை புதுக்கோட்டையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 7-ம் கட்ட மக்களவை தேர்தலில் 9 மணி நிலவரம் நிலவரப்படி, 

பீகார் - 10.65%.

இமாச்சல் பிரதேசம் - 0.87%,

மத்திய பிரதேசம் - 7.16%,

பஞ்சாப் - 4.64%,

உ.பி - 5.97%, 

மே.வங்கம் - 10.54%.

ஜார்கண்ட் - 13.19%,

சண்டிகர்- 10.40%

இடைத்தேர்தல் தேர்தல் வாக்குப்பதிவு - 9 மணி நிலவரம்

* சூலூர் - 14.40%,

* அரவக்குறிச்சி - 12.67%

* திருப்பரங்குன்றம் - 12.05%,

* ஒட்டப்பிடாரம் -14.53% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story