பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு


பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 May 2019 1:05 PM IST (Updated: 19 May 2019 1:05 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ராஜேஷ்வரி நகரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Next Story