கருத்துக் கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி : பங்குச் சந்தைகள் உயர்வு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கின.
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டைப் போலவே பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் அதிகரித்து, 38,892.89 புள்ளிகளிலும், நிஃப்டி 286.95 புள்ளிகள் உயர்ந்து, 11,694.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
#CNBCTV18Market | Frontline indices open with a gain of over 2% each after #ExitPolls predict majority for BJP-led NDA in #LokSabhaElections2019pic.twitter.com/pZSmgruoPw
— CNBC-TV18 (@CNBCTV18Live) May 20, 2019
Related Tags :
Next Story