மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்வுடன் முடிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
x
தினத்தந்தி 20 May 2019 4:20 PM IST (Updated: 20 May 2019 4:20 PM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  நேற்று இறுதி கட்ட தேர்தல் நடந்தது.  இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டை போலவே பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இன்று காலை சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் அதிகரித்து, 38,892.89 புள்ளிகளிலும், நிஃப்டி 286.95 புள்ளிகள் உயர்ந்து, 11,694.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 352 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.  இதேபோன்று நிப்டி குறியீடு 421.10 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 828 புள்ளிகளாக முடிவடைந்து உள்ளது.

Next Story