மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; பா.ஜ.க. கோரிக்கை


மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; பா.ஜ.க. கோரிக்கை
x
தினத்தந்தி 20 May 2019 11:07 AM GMT (Updated: 20 May 2019 11:07 AM GMT)

மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பா.ஜ.க. இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அங்கு எதிர்க்கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது.  இந்த நிலையில் பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும் மற்றும் காங்கிரஸ் அரசின் வலிமையை நிரூபிக்க அக்கட்சி மெஜாரிட்டியை நிரூபிக்கவும் வலியுறுத்துவோம் என கூறினார்.

21 லட்ச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன என அவர்கள் கூறி வருகின்றனர்.  ஆனால் இதுபோன்ற முக்கிய விவகாரங்களை பற்றிய விவாதங்கள் சட்டசபையில் தவிர்க்கப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்காக ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு இதுபற்றி கடிதம் ஒன்று எழுதியுள்ளேன் என கூறிய அவர், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்டவை பற்றி விவாதம் நடத்தவும் விரும்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Next Story