ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்திட்ட புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு


ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்திட்ட புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு
x
தினத்தந்தி 21 May 2019 3:16 PM IST (Updated: 21 May 2019 3:53 PM IST)
t-max-icont-min-icon

ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்திட்ட புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் அவ்வப்போது புதிய வடிவில் வெளியிடப்படுவது உண்டு. அந்த வகையில் சமீப காலமாக ரூ.50, ரூ.10, ரூ.200 நோட்டுகள் புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டன. 

இந்நிலையில் 10 ரூபாய் புதிய நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக வெளியிடப்படும்  10 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்து  இடம் பெற்றிருக்கும்.  

புதிய 10 ரூபாய் நோட்டில் ’பாரத்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செக்யூரிட்டி திரட் இருக்கும். இடதுபுறம் அச்சிடப்பட்ட ஆண்டு மற்றும் ஸ்வச் பாரத் லோகோ காணப்படும். 

அதே சமயம் பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story