சுனில் அரோரா உடனான ஆலோசனையில் பங்கேற்கிறார் அசோக் லவாசா
தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உடனான ஆலோசனையில் அசோக் லவாசா பங்கேற்கிறார்.
புதுடெல்லி,
தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் இருப்பது வழக்கம். அதன்படி தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருந்து வருகிறார். ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம்.
இதனிடையே தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா புகார் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனக் கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உடனான ஆலோசனையில் பங்கேற்கிறார். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய கூட்டத்தில் அசோக் லவாசா பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story