திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்
பூமியை கண்காணிக்க ரிசாட்–2பி என்ற நவீன ரேடார் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அந்த செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி–46 என்ற ராக்கெட் இன்று (புதன்கிழமை) அதிகாலை விண்ணில் பாய்கிறது.
திருமலை,
பி.எஸ்.எல்.வி. சி–46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறக்க வேண்டி, இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று அதிகாலை வி.வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபட்டார். அப்போது ராக்கெட்டின் மாதிரி உருவம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மூலவரின் பாதத்தில் வைத்து, சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் சிவனுக்கு லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி அவருக்கு ஆசி வழங்கினார்கள். முன்னதாக, கோவிலுக்கு வந்த இஸ்ரோ தலைவர் சிவனை, திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர். முன்னதாக அவர் ஸ்ரீகாளஹஸ்தி சென்று அங்குள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story