சொத்து குவிப்பு வழக்கு : முலாயம்சிங், அகிலேஷ் யாதவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்


சொத்து குவிப்பு வழக்கு : முலாயம்சிங், அகிலேஷ் யாதவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 10:21 PM GMT)

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ், அவருடைய மகனும், முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது.

புதுடெல்லி, 

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு சி.பி.ஐ. சார்பில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக முறையான வழக்கு பதிவு செய்ய ஆதாரங்கள் இல்லை என்றும், இதுதொடர்பான அறிக்கை, ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது. அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story