2 பேரை கடத்தி பிறப்புறுப்பில் தீ வைத்து பணம் கொள்ளையடித்து வீடியோ பதிவு செய்த கடத்தல்காரர்கள்


2 பேரை கடத்தி பிறப்புறுப்பில் தீ வைத்து பணம் கொள்ளையடித்து வீடியோ பதிவு செய்த கடத்தல்காரர்கள்
x
தினத்தந்தி 22 May 2019 6:57 PM IST (Updated: 22 May 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் 2 பேரை கடத்தி காருக்குள் வைத்து பிறப்புறுப்பில் தீ வைத்து பணம் கொள்ளையடித்து அதன் வீடியோ பதிவை வெளியிட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

சிகார்,

ராஜஸ்தானில் வசித்து வரும் கரம்வீர் மற்றும் அவினாஷ் ஆகிய இருவரும் உறவினர்கள்.  இவர்கள் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கடந்த மே 17ந்தேதி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.  அவர்களை சந்தீப் நெஹ்ரா மற்றும் அவரது 5 நண்பர்கள் திடீரென காருக்குள் தள்ளி விட்டு அடித்து உள்ளனர்.

இதன்பின் தனி இடத்திற்கு கொண்டு சென்று அவர்களின் உடைகளை களைய செய்து பிறப்புறுப்புகளில் அடித்துள்ளனர்.  பின்பு தீக்குச்சிகளால் அவற்றை கொளுத்தி உள்ளனர்.  இதனால் அலறிய அவர்களிடம் இருந்து ரூ.3,800 பணத்தினையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  சிகார் மாவட்டத்தின் தோட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அனைத்தும் 6 பேரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடத்தல்காரர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசாரிடம் கூறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் அச்சுறுத்தி உள்ளனர்.  பாதிக்கப்பட்ட 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story