ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலி


ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலி
x
தினத்தந்தி 23 May 2019 1:18 AM IST (Updated: 23 May 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலியாயினர்.

அமராவதி,

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆந்திராவில் வருகிற 25-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


Next Story