தேசிய செய்திகள்

பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து + "||" + Swaraj congratulates Modi for 'big win'

பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து

பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து
நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால், பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால், பாஜக தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜக மூத்த  தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில்  கூறியிருப்பதாவது:- “பாஜகவுக்கும் மிகப்பெரும் வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான்  மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார்.
2. நொய்டாவில் சுற்றுச்சூழல் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ள சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
3. ஜனாதிபதியாவது எப்படி? பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய மாணவன்
ஜனாதிபதியாவது எப்படி என கேள்வி எழுப்பிய மாணவனுக்கு பிரதமர் மோடி ஆச்சரியம் கலந்த பதிலளித்து உள்ளார்.
4. விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடைவோம்; பிரதமர் மோடி ஊக்கம்
விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடைவோம் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினார்.
5. பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து
பலத்த மழை எச்சரிக்கை எதிரொலியாக, பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.