தேசிய செய்திகள்

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் + "||" + In Delhi HC, ED seeks cancellation of anticipatory bail to Robert Vadra

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவினை, அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.


இது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. முன்ஜாமீன் காலத்தில் 2 பேரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டன.

இந்நிலையில் அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில்–களியக்காவிளை இடையே குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அவதி கலெக்டர் அலுவலகத்தில் ச.ம.க. மனு
நாகர்கோவில்–களியக்காவிளை இடையே குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ச.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
2. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
3. செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி வெங்கனூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி வெங்கனூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4. அரசு கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் மனு
முன்னாள் நகராட்சி துணை தலைவர் கொலை மிரட்டல் விடுக்கிறார் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் மனு அளித்தார்.