தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி + "||" + 197 MPs, including 27 women, won the parliamentary election again

நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட, 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.
புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள், ஏற்கனவே பதவியில் இருக்கும் எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கின. இதில் 27 பெண்கள் உள்பட 197 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவை சேர்ந்த 145 எம்.பி.க்கள் தங்கள் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர். இவர்களில் நிதின் கட்காரி, கிரண் ரெஜிஜு, ஜூவல் ஓரம், ராதாமோகன் சிங், பாபுல் சுப்ரியோ போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.


பீகாரில் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீண்டும் எம்.பி.க்கள் ஆகி உள்ளனர். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 2 பேரும், லோக் ஜனசக்தியை சேர்ந்த 3 பேரும் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மகுடம் சூடியிருக்கின்றனர்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி 9 எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கியது. இதில் 2 பேர் மட்டுமே தங்கள் பதவியை உறுதி செய்துள்ளனர். இதைப்போல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 2 எம்.பி.க்களும் மீண்டும் வென்றுள்ளனர்.

இவ்வாறு பல கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி வாகை சூடிய நிலையில், மீண்டும் களமிறங்கியவர்களில் ஒருவர் கூட தொகுதியை தக்க வைக்க முடியாத நிலையை அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா? - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா என்பது குறித்து தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
2. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு - மாநில தலைமையில் மாற்றம் இல்லை
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைமையில் மாற்றம் செய்யப்படவில்லை.
3. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா?
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
4. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது
நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
5. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...