தேசிய செய்திகள்

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது + "||" + Delhi: More visuals from Congress Working Committee(CWC) meeting at party office

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது.
புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு மத்தியில்,  காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

மேலும், தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகலாம் எனவும் கூறப்பட்டதால், இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.
2. காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
3. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்
காங்கிரஸ் மூத்ததலை வர்களான பரமேஸ்வர், ஜாலப்பா ஆகியோரின் மருத்துவகல்லூரிகள், வீடு-அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
4. ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார்
காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர்.