தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை: தோல்வி குறித்து காங். நிர்வாகிகள் புலம்பல் + "||" + Rahul Gandhi’s negative campaign didn’t work: Senior Congress leaders on eve of CWC

ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை: தோல்வி குறித்து காங். நிர்வாகிகள் புலம்பல்

ராகுல் காந்தியின்  எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை: தோல்வி குறித்து காங். நிர்வாகிகள் புலம்பல்
ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வியடைந்தது.  இதனால் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ராகுல் காந்தி, தனது பிரசாரத்தின் போது ரபேல் விவகாரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக காவலாளியே திருடன் என கூறி கடுமையாக மோடியை சாடினார். 

இந்த நிலையில், ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை என்று ராகுல் காந்திக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் முனுமுனுக்க துவங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இது பற்றி சிலர் கூறும்போது,  ராகுல் காந்தியின் “காவலாளி ஒரு திருடன்” என்ற நரேந்திரமோடி மீதான கருத்து எதிர்மறை வினையை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் புல்வாமா தீவிரவாத தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் பொழுது காங்கிரஸ் கட்சி தலைமை அதனை சரிவர கையாளாத தன்மை தோல்விக்கு காரணம் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார். குடும்ப அரசியலை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பவில்லை என்றும் ஒரு நிர்வாகி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
2. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல்..!
எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் ராகுல் காந்தி சென்ற நிலையில், ராஜ்நாத் சிங் கையெழுத்திட ராகுலுக்கு நினைவூட்டினார்.
4. ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்.பி.க்கள்
ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது நீண்ட நேரம் மேஜையை தட்டி பாஜக எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
5. ‘ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்’ - கட்சி மேலிடம் உறுதி
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார் என கட்சி மேலிடம் உறுதியாக கூறியுள்ளது.