சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு விமானப்படையின் தயார் நிலையை பாதிக்கும் : ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனு


சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு விமானப்படையின் தயார் நிலையை பாதிக்கும் : ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனு
x
தினத்தந்தி 25 May 2019 11:43 PM GMT (Updated: 25 May 2019 11:43 PM GMT)

ரபேல் விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள மறு ஆய்வு மனுக்களை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவது விமானப்படை நடவடிக்கையின் தயார் நிலையை பாதிக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக முற்றுப்பெறாத ஆவணங்களை மனுதாரர்கள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய அரசு, பாதுகாப்பு தயார் நிலை, போர் விமானங்கள் கொள்முதல் போன்றவற்றில் கோர்ட்டு தலையிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளது. 

இந்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிபுணர்களிடம் விட்டுவிடுமாறும் கோரிக்கை விடுத்து இருக்கிறது.


Next Story