தேசிய செய்திகள்

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர் + "||" + Party leaders rejected Mamata Banerjee's resignation

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்
நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி எடுத்த ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்.

கொல்கத்தா, 

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்தார். தன்னுடைய அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அனைத்து தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, இதை தனக்கு கிடைத்த தோல்வியாக கருதுகிறார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று என்னுடைய முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தேன். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.

மேற்கு வங்காளத்தில் ஓட்டுகளை பெறுவதற்காக மதவாத பிரிவினையை மக்களிடையே பா.ஜ.க. தூண்டியது. பா.ஜனதா பெற்ற மிகப்பெரிய வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயல்பட்டன.

பா.ஜ.க.வின் தேர்தல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு உதவுவதற்காக சில அமைப்புகளும், வெளிநாட்டு சக்திகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அவசர நிலையை போல் நெருக்கடியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் கமி‌ஷன், ஊடகங்கள் போன்றவை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்கு பயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அசாம் குடிமக்களின் பட்டியலில் "பல உண்மையான வாக்காளர்கள் வெளியேற்றம்" - அமித்ஷாவிடம் மம்தா பானர்ஜி புகார்
அசாம் குடிமக்களின் பட்டியலில் "பல உண்மையான வாக்காளர்கள்" வெளியேற்றப்பட்டதாக அமித்ஷாவுடனான சந்திப்பில் மம்தா பானர்ஜி கோரிக்கை மனு அளித்தார்.
2. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு
பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
3. அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
அனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4. 100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள் வேலை) திட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
5. மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார்.