தேசிய செய்திகள்

தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார் + "||" + Rooster's crowing drives woman to police in Maharashtra

தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்

தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்
தினமும் காலையில் கூவி தூங்குவதற்கு இடையூறாக இருந்த சேவல் மற்றும் அதன் உரிமையாளர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் சோம்வார் பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.  இதில், தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவி எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, பெண்ணின் புகாரை பெற்று கொண்டோம்.  இதனை விசாரித்தபொழுது, அந்த பெண் அவரது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.  சில நாட்களுக்கு முன் அங்கு வந்த அந்த பெண் புகார் கொடுத்து விட்டு சென்று விட்டது தெரிய வந்துள்ளது என கூறினர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர்.  ஆனால் அவர், எனது சகோதரி சற்று மனநிலை பாதித்தவள் என கூறி விட்டார்.  இதனால் இந்த விவகாரத்தில் முறைப்படி புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகிரியில் கோவில் சிலை உடைப்பு சம்பவம்: பெண் உள்பட 5 பேர் கைது
சிவகிரியில் கோவில் சிலை உடைப்பு சம்பவத்தில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை
அமெரிக்காவில் துணி நிறுவன விளம்பர பலகையில் அதிபர் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
3. அளவுக்கு மீறிய சிரிப்பு; பெண்ணுக்கு வந்த ஆபத்து
சீனாவில் அளவுக்கு மீறிய சிரிப்பினால் பெண் ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
4. செக் குடியரசு நாட்டில் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
செக் குடியரசு நாட்டில் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. டி.வி. ரிமோட்டை கொண்டு தாக்கி தந்தையை கொலை செய்த பெண்
டி.வி. ரிமோட்டை கொண்டு தாக்கி பெண் ஒருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார்.