ஆந்திராவில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்


ஆந்திராவில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்
x
தினத்தந்தி 28 May 2019 11:53 AM GMT (Updated: 28 May 2019 11:53 AM GMT)

ஆந்திர சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அமராவதி,

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.   இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மொத்தம் தேர்வான174 எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

சராசரியாக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 27 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அதில் 668 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 510 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது இடம் பெற்றுள்ளதாகவும்  புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Next Story