சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம்


சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம்
x
தினத்தந்தி 28 May 2019 8:38 PM GMT (Updated: 28 May 2019 8:38 PM GMT)

சமூக வலைதளத்தில் நடிகை ஊர்மிளா குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

புனே,

நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் பா.ஜனதாவின் கோபால் ஷெட்டியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ஊர்மிளா மடோங்கர் போட்டியிட்டார். நடிகை என்பதால் ஊர்மிளா மீது எதிர்பார்ப்பு எகிறியது. எனினும் அவர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் கோபால் ஷெட்டியிடம் தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில் புனேயை சேர்ந்த தனஞ்செய்(வயது57) என்பவர் நடிகை ஊர்மிளாவை தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், அவர் நடிகையை பாலியல் ரீதியாகவும் விமர்சித்து உள்ளார்.

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விஷ்ரம்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து போலீசார் நடிகையை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்து பதிவிட்ட தனஞ்செய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story