பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு


பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு
x
தினத்தந்தி 28 May 2019 9:02 PM GMT (Updated: 28 May 2019 9:02 PM GMT)

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனால் அவர் நாளை (வியாழக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், மாநில வளர்ச்சிக்கு தங்களின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும், ஜெகன்மோகன் ரெட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Next Story