அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு பதவியேற்பு


அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு பதவியேற்பு
x
தினத்தந்தி 29 May 2019 9:11 AM GMT (Updated: 29 May 2019 9:11 AM GMT)

அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு பதவியேற்று கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.  இதில் கடந்த ஏப்ரல் 11ந்தேதி நடந்த தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேச சட்டசபைக்கான தேர்தலும் நடத்தப்பட்டது.  சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்த, சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட வடகிழக்கு மாநிலத்திற்கான தேர்தலில் 41 தொகுதிகளை காண்டு தலைமையிலான பா.ஜ.க. கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு இன்று 2வது முறையாக பொறுப்பேற்று கொண்டார்.  அவருக்கு ஆளுனர் பி.டி. மிஷ்ரா முறைப்படி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் காண்டுவின் அமைச்சரவை சகாக்களான 11 மந்திரிகளும் அவருடன் பதவியேற்று கொண்டனர்.

Next Story