கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது - கேரள அமைச்சர்


கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது - கேரள அமைச்சர்
x
தினத்தந்தி 29 May 2019 11:08 AM GMT (Updated: 29 May 2019 11:08 AM GMT)

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 1000 டிஎம்சிக்கு அதிகமான தண்ணீர் வீணாகிறது என கேரள அமைச்சர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும், அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறியதாவது;_

1500 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தும் கடந்த 35 ஆண்டுகளாக அவ்வாறு பயன்படுத்தவில்லை. கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும், அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் ஆழியாறு என தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே நீண்ட காலமாக நதிநீர் பிரச்சினை நிலவி வரும் நிலையில் கேரளாவில் தண்ணீர் பயன்படுத்தப்படாமல் வீணாவதாக அமைச்சர் வெளியிட்ட தகவல், தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story