டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்


டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 7:04 AM IST (Updated: 1 Jun 2019 7:04 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.  

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வியூகங்கள்  வகுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல், இந்தக் கூட்டத்தின்போது மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரையும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றகுழு தலைவராக தற்போது சோனியா காந்தி  உள்ளார். எனவே, சோனியா காந்தி இப்பொறுப்பில், நீடிக்க அக்கட்சி முடிவு செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Next Story