தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை
தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வென்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 24 கேபினட் மந்திரிகள், 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் உள்பட 54 மந்திரிகளுக்கான இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை மந்திரியாக இன்று தனது பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story