பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை: ஓவைசி


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை: ஓவைசி
x
தினத்தந்தி 1 Jun 2019 10:27 AM IST (Updated: 1 Jun 2019 4:27 PM IST)
t-max-icont-min-icon

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்தார். ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து 4  வது முறையாக வெற்றி பெற்றுள்ள ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது ஓவைசி கூறியதாவது:   “ மோடியால் கோவிலுக்கு சென்று வழிபட முடியுமென்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம்.  மோடியால் குகைக்குள் போய் அமர முடியுமென்றால், முஸ்லிம்களாகிய நாம், பெருமையுடன் மசூதிகளில் தொழுகை நடத்தலாம். 300 இடங்களில் வெற்றி பெற்று பெறுவது மிகப்பெரிய விவகாரம் இல்லை. ஏனெனில், இந்தியா அரசியலமைப்பில் வாழ்கிறது.  300 தொகுதிகளில் வென்று விட்டதால் மட்டுமே அவர்களால் (பாரதீய ஜனதா) நமது உரிமைகளை பறித்து விட முடியாது” என்றார். 

Next Story