பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள் 22 கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள்


பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள் 22 கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள்
x
தினத்தந்தி 1 Jun 2019 11:11 AM IST (Updated: 1 Jun 2019 11:11 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்களும் 22 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 

 மோடி தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது.

அதில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்களாம். குறிப்பாக அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு அமைச்சருக்கு ரூ.14.72 கோடி சொத்து உள்ளது.

Next Story