தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித்ஷா + "||" + BJP President Amit Shah Takes Charge As Home Minister

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித்ஷா

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித்ஷா
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள அமித்ஷா, உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடி 2-வது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 24 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். மோடிக்கும், மந்திரிகளுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மந்திரிசபையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாகா ஒதுக்கப்பட்டது. இதன்படி, உள்துறை அமைச்சர் பொறுப்பு அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட அமித்ஷா, இன்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முன்னதாக, அலுவலகம் வந்த அமித்ஷாவை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா வரவேற்றார்.