உத்தரபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை


உத்தரபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 1 Jun 2019 4:51 PM IST (Updated: 1 Jun 2019 4:51 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர்கள் அனைவரும் தங்களது பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆண்டுதோறும் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். 

தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து இடைவெளியை பின்பற்றுவது அவசியம். ரூ.5 ஆயிரத்துக்கு மேலான மதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாக வாங்கக்கூடாது என யோகி ஆதித்யநாத் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story