ஆற்றில் படகு கவிழ்ந்தது: 5 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டி நீரில் மூழ்கி பலி
ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், 5 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டி நீரில் மூழ்கி பலியானார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மவூரா பகுதியில் இருந்து 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படகில் லிடர் ஆற்றை கடக்க முயன்றனர். அவர்களுடன் ரூப் அகமது தார் என்பவர் வழிகாட்டியாக பயணித்தார்.
இந்தநிலையில் திடீரென வீசிய பயங்கர காற்றால் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. ஆற்றுக்குள் விழுந்த சுற்றுலா பயணிகள் 5 பேரும் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்போது ரூப் அகமது தார் நொடிப் பொழுதுகூட தாமதிக்காமல் அவர்கள் 5 பேரையும் ஒவ்வொருவராக மீட்டு கரையில் கொண்டுவந்து சேர்த்தார். இதில் சோர்வடைந்ததாலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாலும் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.
தன் உயிரை துச்சமாக நினைத்து சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய அவரது பெயர் துணிச்சலான விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story