மம்தா பானர்ஜிக்கு "ஜெய் ஸ்ரீ ராம்" என எழுதி 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப பா.ஜ.க. முடிவு
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு "ஜெய் ஸ்ரீ ராம்" என எழுதி 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாகனத்தின் முன் ஜெய்ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜெய்ஸ்ரீராம் என எழுதிய, 10 லட்சம் தபால் அட்டைகளை மம்தா பானர்ஜிக்கு அனுப்ப உள்ளதாக பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.
10 பேரை கைது செய்துள்ள மம்தா பானர்ஜி, வேண்டுமானால் 10 லட்சம் பேரையும் கைது செய்து பார்க்கட்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story