எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை - மத்திய வெளியுறவுத்துறை மந்திரி
எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதில் முக்கியமானது என்னவென்றால், மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்பது தான். அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும் என பதிவிட்டுள்ளார்.
The National Education Policy as submitted to the Minister HRD is only a draft report. Feedback shall be obtained from general public. State Governments will be consulted. Only after this the draft report will be finalised. GoI respects all languages. No language will be imposed
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 2, 2019
Related Tags :
Next Story