நடிகர் அஜய் தேவகனின் தந்தை மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
நடிகர் அஜய் தேவகனின் தந்தை மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவகனின் தந்தை வீரு தேவகன் (வயது 77) கடந்த மாதம் 27–ந் தேதி மரணமடைந்தார். இந்தி திரையுலகில் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றிய அவர் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். அத்துடன் திரைப்பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார்.
வீரு தேவகனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் கடிதம் ஒன்றை மோடி அனுப்பி உள்ளார். அதில் வீரு தேவகனின் திரையுலக பணிகளை அவர் பாராட்டி இருந்தார்.
அதில் அவர் கூறும்போது, ‘இந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர் வீரு தேவகன். அவர் உலக அளவில் மக்களின் அன்பை பெற்றதிலும், திரையுலகினரின் மதிப்பை பெற்றிருந்ததிலும் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரது மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயருற்றேன். அவரது மறைவு இந்தி திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிரதமர் மோடியின் கடிதத்தை, நடிகர் அஜய் தேவகன் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து பிரதமருக்கு நன்றி கூறியிருந்தார்.
Related Tags :
Next Story