டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அரசு பேருந்து, டெல்லி மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கெஜ்ரிவால் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். எனினும், இந்த திட்டத்துக்கு இன்னும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்படவில்லை என தெரிகிறது. டெல்லி அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி அம்மாநில அரசுக்கு செலவினம் கூடுதலாக ஏற்படும்.
Related Tags :
Next Story