உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள்


உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள்
x
தினத்தந்தி 3 Jun 2019 2:14 PM IST (Updated: 3 Jun 2019 2:14 PM IST)
t-max-icont-min-icon

உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் வெப்பத்தின் பிடியில் உள்ளன. சிம்லா, நைனிடால், ஸ்ரீநகர் போன்ற குளிர் பிரதேசங்களில் கூட இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

முறையே 48.9 மற்றும் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ராஜஸ்தானின் சுரு மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்கள் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இதற்கடுத்த இடத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ஜாக்கோபாபாத் (பாகிஸ்தான்) உள்ளது. 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய உத்தர பிரதேசத்தின் பண்டா , 47.2 டிகிரி செல்சியஸ் நிலவிய அரியானாவின் நர்நுவல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்த ஆய்வு நாடு முழுவதும் 395 வானிலை மையங்களின் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதிகபட்ச, குறைந்தபட்ச மற்றும் தினசரி சராசரி வெப்பநிலை ஆய்வுக்கு கோடை, பருவ மற்றும் குளிர்கால மாதங்களில் நிலவும் காலநிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஸ்பேஸ் நிர்வாகத்தின் கருத்துப்படி, இந்த நூற்றாண்டின் 15 ஆண்டுகள் 1880 ஆம் ஆண்டுக்கு பிறகு வெப்பமானதாக இருந்தன. இது காலநிலை விஞ்ஞானிகள் நம்பியதை விட உலக வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை இது காட்டுகிறது. 1880 மற்றும் 2018 க்கு இடையே உலக சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளது.  தற்போதைய வெப்பநிலையை கீழே காணலாம் :-

எண்நகரம்வெப்பநிலை
1ஜகோபாபாத் (பாகிஸ்தான்)51.1°சி
2 பத் இதான் ( பாகிஸ்தான் )50.1°சி
3ரோக்ரி (பாகிஸ்தான்)49.1°சி
4சிபி  (பாகிஸ்தான்)49.1°சி
5சுரு ( இந்தியா)48.9°சி
6கங்காநகர் (இந்தியா)48.6°சி
7பகவல்நகர் (பாகிஸ்தான்)48.5°சி
8நவாப்ஷா (பாகிஸ்தான்)48.5°சி
9பாலோடி (இந்தியா)48.2°சி
10பிகானர் (இந்தியா)48.1°சி
11கான்பூர் பாகிஸ்தான்)48.1°சி
12ஜெய்சால்மர் (இந்தியா)47.8°சி
13நவ்காங்க்  (இந்தியா)47.7°சி
14நர்நுவல் (இந்தியா)47.6°சி
15கஜூராகோ(இந்தியா)47.5°சி

Next Story