தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக குறைந்த தொகுதிகளையே கைப்பற்றியது. இந்த நிலையில், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரான நதீம் ஜாவித் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது என கூறினார்.
ஆனால் மாநில அளவில் இப்தார் விருந்து நடைபெறும். கடந்த வாரம் டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தலைமையில் இப்தார் விருந்து நடந்தது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி தலைமையில் கடந்த வருடம் டெல்லியில் உள்ள பிளஷ் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாமல் போனதற்கு மக்களவை தேர்தல் முடிவு ஒரு காரணம் என காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story