மாநிலங்களவை கூட்டத்தொடர் 20–ந் தேதி தொடங்குகிறது


மாநிலங்களவை கூட்டத்தொடர் 20–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Jun 2019 12:05 AM IST (Updated: 4 Jun 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை கூட்டத்தொடர் 20–ந் தேதி தொடங்குகிறது

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் வருகிற 17–ந் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19–ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20–ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26–ந் தேதி கூட்டத்தொடர் முடிகிறது.

இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரை வருகிற 20–ந் தேதி தொடங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக்வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உடனடியாக கவனிக்க வேண்டிய அரசு அலுவல்கள் காரணமாக மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 20–ந் தேதி தொடங்கி ஜூலை 26–ந் தேதி முடிவடைகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story