திருப்பதி கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம்


திருப்பதி கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 Jun 2019 12:02 PM IST (Updated: 4 Jun 2019 12:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேசுவரர் கோவிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் மேற்கொண்டார். 2 நாட்கள் பயணமாக நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்த துணை ஜனாதிபதி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.

அவரது வருகையையொட்டி திருமலை கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று காலை, சாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story