இப்தார் விருந்துக்கு மசூத் அசாரைப் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என பாக்.கிற்கு கோபம்: சிவசேனா விமர்சனம்


இப்தார் விருந்துக்கு மசூத் அசாரைப் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என பாக்.கிற்கு கோபம்: சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 4 Jun 2019 1:53 PM IST (Updated: 4 Jun 2019 1:53 PM IST)
t-max-icont-min-icon

இப்தார் விருந்துக்கு மசூத் அசாரைப் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என பாகிஸ்தான் கோபம் அடைந்துள்ளது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

மும்பை

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 1-ம் தேதி இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செரினா ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதர் அஜய் பிசாரியா செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனால் இந்த விருந்தில் அந்நாட்டு அதிபரோ, பிரதமரோ பங்கேற்கவில்லை. அதேநேரம் விருந்தில் பங்கேற்க வந்த மற்ற முக்கிய பிரமுகர்களிடம் முன் எப்போதும் இல்லாத வகையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கெடுபிடி காட்டி அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல விருந்தினர்களின் காரை இடைமறித்து திருப்பி அனுப்பி உள்ளனர். வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டலைச் சுற்றிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு கெடுபிடி காரணமாக இந்த விருந்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டதாக  கூறப்பட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இப்தார் விருந்து நிகழ்வுக்கு மசூத் அசார் போன்ற நபர்கள் அழைக்கப்படவில்லை என்பதால் பாகிஸ்தான் அதிருப்தி அடைந்தது. இதனால், விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிராக கெடுபிடிகளை பாகிஸ்தான் காட்டியிருக்கிறது என்று சிவசேனா கட்சி சாம்னா நாளிதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. 

Next Story