ராணுவ வீரரை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்த விசாரணை அதிகாரிக்கு எதிராக வழக்கு


Mohammed Sanaullah
x
Mohammed Sanaullah
தினத்தந்தி 4 Jun 2019 3:57 PM IST (Updated: 4 Jun 2019 3:57 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரரை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிக்கு எதிராக வழக்கு

கவுகாத்தி

அசாமில் ராணுவ வீரரை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்த விவகாரத்தில், தங்கள் கையெழுத்து ஆவணங்கள் ஆகியவை போலியாக தயாரிக்கப்பட்டதாக, சாட்சிகள் 3 பேர் விசாரணை அதிகாரிக்கு எதிராக, வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அசாமில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட குடிமக்கள் பதிவேட்டில், கார்கில் போரில் பங்கேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சனாவுல்லா என்பவர் சட்டவிரோத குடியேறி என்று அறிவிக்கப்பட்டார்.

இது குறித்த வழக்கை விசாரித்த வெளிநாட்டினர் தீர்ப்பாயமும், சனாவுல்லாவை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்ததை அடுத்து அவர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்திரமால் தாசால், சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 3 பேர், சனாவுல்லாவுக்கு எதிராக தாங்கள் சாட்சி ஏதும் கூறவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓய்வு பெற்ற விசாரணை அதிகாரி சந்திரமால், தங்கள் கையெழுத்து, ஆவணங்கள் ஆகியவற்றை போலியாக தயாரித்துள்ளதாகவும், விசாரணை அதிகாரியை தாங்கள் சந்தித்ததே இல்லை எனவும் கூறி, அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related Tags :
Next Story