ஜூன் 15-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்


ஜூன் 15-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2019 7:00 PM IST (Updated: 4 Jun 2019 7:00 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 15-ல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு வரும் 15-ம் தேதி ஆண்டின் முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்கள், துணை நிலை கவர்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மாநில அரசின் கருத்துகள், கொள்கை முடிவு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story